பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெக்கும் தேசிய நெல் திருவிழா....! இயற்கை விவசாய அரிசியை விநியோகிக்க விவசாயிகள் கோரிக்கை...!

திருக்குவளையில் நடைபெற்ற பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெக்கும் தேசிய நெல் திருவிழாவில் பாரம்பரிய நெல்லின் விளைச்சலை அதிகப்படுத்த நியாயவிலைக்கடைகள் மற்றும் சத்துணவு கூடங்களில் இயற்கை விவசாய அரிசியை விநியோகிக்க அரசு முன்வர வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெக்கும் தேசிய நெல்  திருவிழா....! இயற்கை விவசாய அரிசியை விநியோகிக்க விவசாயிகள் கோரிக்கை...!

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் தேசிய அளவிலான 16 வது நெல் திருவிழா இன்று நடைபெற்றது. கிரியேட் - நமது நெல்லை காப்போம் மற்றும் சேவாலயா நிறுவனம் இணைந்து நடத்திய நெல் திருவிழாவில் பராம்பரிய இயற்கை சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட  விவசாயிகளுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது.

 இந்நிகழ்வில் மாப்பிள்ளை சம்பா, தங்கச்சம்பா, சீரக சம்பா,தூயமல்லி போன்ற பாரம்பரிய நெல் விதைகள், 100 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழக அரசு நுகர்வோரையும், இயற்கை விவசாயிகளையும் பாதுகாக்கும் வகையில் மாநில விவசாய கொள்கையை கொண்டு வர வேண்டுமெனவும், பாரம்பரிய நெல்லின் விளைச்சலை அதிகப்படுத்த நியாயவிலைக்கடைகளிலும், சத்துணவு கூடங்களிலும்  இயற்கை விவசாய அரிசியை விநியோகிக்க அரசு முன்வர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் நிகழ்வில் பங்கேற்ற விவசாயிகள் அனைவருக்கும் பசுமையை காக்கும் வகையில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.