ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய விரைவில் புதிய சட்டம்- அமைச்சர் ரகுபதி அறிவிப்பு...

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். 

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய விரைவில் புதிய சட்டம்- அமைச்சர் ரகுபதி அறிவிப்பு...

இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும், இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தடை விதித்து அவசர நிலையில்  அ.தி.மு.க. அரசு சட்டம் இயற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.  

இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், உரிய கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துவைத்த போதிலும், போதுமான காரணங்களை சட்டம் நிறைவேற்றிய போது கூறவில்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி சட்டத்திற்கு தடைவிதித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

இதையடுத்து உரிய விதிமுறைகள் மற்றும் தகுந்த காரணங்களை தெளிவாக குறிப்பிட்டு விரைவில் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க விரைவில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.