தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்...எதற்கெல்லாம் அனுமதி?

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்...எதற்கெல்லாம் அனுமதி?

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

  1. கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு  அமல்ப்படுத்தபடும் எனவும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்பதால் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  2. பெட்ரோல், டீசல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  3. இரவு ஊரடங்கு நேரத்தில் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
  4. பால், பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனை, மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி போன்ற அவசிய பணிகளுக்கு ,மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  5. உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  6. பணிக்கு செல்லும் ஊழியர்கள் தங்களது நிறுவனங்களால் அளிக்கப்படும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  7. தகவல் தொழில்நூட்ப நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்துமாறு நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  8. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  9. முழு ஊரடங்கு நாளான 9-ஆம் தேதி பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில்கள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  10. சென்னை மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளிலும் நடைப்பயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  11. அழகு நிலையங்கள், சலூன்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  12. திரையரங்குகளில் 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  13. மேலும் அரசு ஊழியர்கள் ஜனவரி 9-ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  14. உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் காலை 7 முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  15. பொதுப் பேருந்துகள், புறநகர் ரயில்களில் 50 % பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  16. விமானம், ரயில், பேருந்துகளில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் சொந்த அல்லது வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  17. வெளியூர் பயணம் மேற்க்கொள்பவர்கள் கைகளில் பயணச்சீட்டு வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  18. சமூதாய கலாசார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  19. பொருட்காட்சி மற்றும் புத்தக கண்காட்சி நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  20. முழு ஊரடங்கில் உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  21. மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20 வரை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  22. அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்களுக்கு தடை விதித்துள்ள தமிழக அரசு, அனைத்து பொழுதுபோக்கு/ கேளிக்கை பூங்காக்கள் செயல்படவும் தடை விதித்துள்ளது.