4 நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நொச்சிக்குப்பம் மீனவர்கள் கைது...!!

4  நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நொச்சிக்குப்பம் மீனவர்கள் கைது...!!

புதிய குடியிருப்புகளை நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு வழங்கக் கோரி 4-ம் நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நொச்சிக்குப்பம் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நொச்சிக்குப்பம் விரிவடைந்த மீனவ குடும்பங்களுக்காக  1188 புதிய குடியிருப்புகளை குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகளை நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு வழங்காமல் மாற்று கிராம மக்களுக்கு வழங்கி வருவதாக தெரிகிறது. 

இந்நிலையில் புதிய குடியிருப்புகளை நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு வழங்க வேண்டுமெனவும் அவ்வாறு வழங்க விடாமல் தடுத்து வரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலுவை கண்டித்தும், நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கான புதிய குடியிருப்பு ஒதுக்கீடு ஆணையை உடனே வழங்கக்கோரியும் கடந்த 4-நாட்களாக அப்பகுதி மீனவ மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவ மக்கள் மற்றும் மீனவ சமுதாய தலைவர்கள்  மயிலாப்பூர் அம்பேத்கர் மேம்பாலம் அருகிலுள்ள சமூக நலக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க:பதவி இழக்கும் அமைச்சர்கள்...! யார்? யார்?