ஓ.பி.எஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்...

அதிமுக ஒருங்கிணைப்பாளரின் மனைவி விஜய லட்சுமி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66.  

ஓ.பி.எஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்...

அதிமுக ஒருங்கிணைப்பாளரின் மனைவி விஜய லட்சுமி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66.

தமிழக அரசின் முன்னாள் முதல்வரும் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி சென்னையில் இருக்கும் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக பெருங்குடியில் உள்ள பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.45 மணி அளவில் உயிரிழந்தார். அண்மையில் விஜயலட்சுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே எதிர்க்கட்சி துணைத் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்த செய்தியை கேட்ட அதிமுக நிர்வாகிகள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.