கலைஞர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள்...திமுக சார்பில் அமைதிப் பேரணி!

கலைஞர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள்...திமுக சார்பில் அமைதிப் பேரணி!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திமுக சார்பில் சென்னையில் அமைதி பேரணி நடைபெற்றது. பேரணியை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தி தொடங்கி வைத்தார்.

பின்னர், அங்கிருந்து கலைஞர் நினைவிடம் வரை அமைதி பேரணியானது நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்பட ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க : ரூ.2 கோடி வேண்டி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பிய பொம்மன், பெள்ளி தம்பதியினர்...!

அமைதி பேரணி மெரினா கடற்கரையை சென்றடைந்த நிலையில், பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து அமைச்சர்களும், தொண்டர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனிடையே கருணாநிதியின் 5-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் திமுக தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.