"சூடானில் மீதமுள்ள தமிழர்களை ......!" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

"சூடானில் மீதமுள்ள  தமிழர்களை ......!" -  அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை ஆப்ரேஷன் காவிரி திட்டத்தின் மூலம் மீட்கும் பணிகளை மத்திய,மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. சூடானில் இருந்து மீட்கப்படும் தமிழர்களை தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை அயலக தமிழர் நலவாழ்வுத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று சூடானில் இருந்து மீட்கப்பட்ட 12 தமிழர்கள் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் அழைத்துவரப்பட்டனர்.அவர்களை விமான நிலையத்தில் அயலாக்க தமிழர் நலவாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் வரவேற்று ஆறுதல் தெரிவித்தார்.

இதையடுத்து அவர்களை சொந்த ஊருக்கு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் அனுப்பி வைத்தனர். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில், 

"சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் சிக்கி உள்ள தமிழர்களை கண்காணித்து தொடர்ந்து அவர்களை தாயகம் அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை சூடான் நாட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 247 பேரை மத்திய,மாநில அரசு உதவி உடன் பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டு அவர்களுன் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இன்று சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர், விருதாச்சலம், சிதம்பரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 12 பேர் டெல்லி அழைத்துவரப்ப்பட்டு அங்கிருந்து சென்னை அழைத்துவரப்பட்டுள்ளனர். அங்கு 300க்கும் மேற்பட்டோர் தமிழர்கள் இருந்ததாக தகவல் வந்தது அவர்களையும் மீட்கும் பணி தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ளவர்களையும் உடனடியாக தமிழக அரசு பாதுகாப்பாக அழைத்து வரும். தமிழர்கள் அனைவரும் தமிழக அரசு செலவிலே அழைத்து வந்து அவர்கள் இல்லங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்" , என்று தெரிவித்தார். 

இதனையடுத்து, சூடானிலிருந்து மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்ட அனுபிரியா கூறுகையில், 

"சூடானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரில் சிக்கி மிகுந்த அச்சத்தில் இருந்தும் எப்படி தாயகம் செல்வது என்று தெரியாமல் தவித்து இருந்தோம் மத்திய,மாநில அரசுகள் அங்குள்ள தூதரகத்தின் மூலம் இணைந்து தங்களை பாதுகாப்பாக அழைத்து வந்தது. மத்திய,மாநில அரசுகளுக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடந்ததால் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தோம்.வீடுகளில் உள்ளேயே துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்தது. உணவு, மின்சாரம் இல்லாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி இருந்தோம். அங்கு உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர்" எனக் கூறினார்.

இதையும் படிக்க      }  "தேசப்பற்றைப் பற்றி பேசுவதற்கு பா.ஜ. க -வுக்கு அருகதை இல்லை..! ...." - துரை வைகோ

மீட்கப்பட்ட ரமேஷ் கூறுகையில்,

"நாங்கள் சூடானிலிருந்து சென்னை வரும் வரை தமிழக அரசு அதிகாரிகள் தங்களை தொடர்பு கொண்டு அனைத்து தேவைகளையும் கேட்டுக் கொண்டு பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளனர். நாங்கள் வசித்த பகுதியில் விமானத்தில் சென்று வெடிகுண்டுகள் வீசிக்கொண்டிருந்தனர் இதனால் உணவு, தண்ணீர்,மின்சாரம் இல்லாமல் கடுமையான அவதிக்குள்ளாகி அனைவரும் அச்சத்தில் இருந்தோம். தமிழக அரசும்மத்திய அரசும் இணைந்து பாதுகாப்பாக அனைவரையும் அழைத்து வந்துள்ளனர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்", அணைக்க கூறினார்.

இதையும் படிக்க      }  டி.என்.பி.எஸ்.சி- யை துண்டாடக் கூடாது: புதிய ஆள்தேர்வு வாரியம் தேவையில்லை...! - ராமதாஸ் அறிக்கை.