சஜித் மிர் விவகாரம்; சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

சஜித் மிர் விவகாரம்; சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

லஷ்கர்-இ-தொய்பாவின் சஜித் மிரை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நாவில் எதிர்ப்பு தெரிவித்த சீனாவிற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஐநா பொதுச் சபையில் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான உயர்மட்ட மாநாட்டில், மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜ்ஜித் மிரை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியாவும் அமெரிக்காவும் இரண்டாவது முறையாக முன்மொழிந்தன. இதற்கு  சீனா ஐக்கிய நாடுகள் சபையில் தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மறுப்பு தெரிவித்த நிலையில், இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் ஐ.நா.வின் நிலைப்பாட்டை, சீனா வேண்டுமென்றே எதிர்த்தால், பயங்கரவாதத்தின் சவாலை உலகம் சமாளிக்காது என்றும் தெரிவித்துள்ளது.

முன்தாக, இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவரான சஜித் மிர், 2008 ஆம் ஆண்டு  மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வருகிறார். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்புக்கு இவர் மூளையாக செயல்பட்டு வந்தாக இவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல்களுக்கு தலைமையாக இருந்து திட்டமிட்டு கொடுத்ததாகவும், முன் தயாரிப்புகள் மற்றும் உளவுத்துறையை இயக்கியவராகவும், மேலும் தாக்குதல்களின் போது பாகிஸ்தானை தளமாகக் கொண்ட கட்டுப்பாட்டாளர்களில் ஒருவராகவும் இவர் இருந்ததாக குற்றம் சாட்டியுள்ள இந்திய அரசு. இவரை பயங்கரவாத நபராகவும் அறிவித்துள்ளது. இந்நிலையில் சஜித் மீரை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு சீனாவானது தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவது இந்திய சீன உறவை மேலும் மோசமாக்கும் என்று கருதப்படுகிறது.

இதையும் படிக்க:கோயில் கதவை உடைத்த பாகுபலி!