சரக்கு லாரி மீது மணல் லாரி மோதி விபத்து..இணையத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சிமென்ட் லாரி மீது டிப்பர் லாரி ஒன்று பலமாக மோதும் சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சரக்கு லாரி மீது மணல் லாரி மோதி விபத்து..இணையத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சி

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தை நான்கு ரோடு பகுதியில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது. சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று சாலையை கடக்க முயற்சி செய்த போது, மணல் டிப்பர் லாரி ஒன்று பலமாக மோதியது.

இந்த விபத்தில் சிமெண்ட் லாரி ஓட்டுநர் அக்பர் பலத்த காயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.