வாரிசு படத்துக்கு பிறகு பிஸியான ஷாம்

வாரிசு படத்துக்கு பிறகு பிஸியான ஷாம்

12பி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமான ஷாம் இயற்கை, லேசா லேசா, பாலா, அன்பே அன்பே, ஏ.பி.சி.டி. ஆகிய படங்களின் மூலம் இளம்பெண்களின் ஆதர்ச நாயகனாக தரம் உயர்ந்தார். ஆனால் காதல் சார்ந்த படங்களிலேயே அதிகம் நடித்து ரசிகர்களிடத்தில் சலிப்பை ஏற்படுத்தியவருக்கு வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியைத் தழுவின. பின்னர் சினிமாவை விட்டு காணாமல் போன ஷாம், தில்லாலங்கடி, பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களில் இரண்டாம் நாயகனாக வலம் வந்தார். ஆயினும் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைக்காத ஷாமுக்கு சமீபத்தில் வெளியான வாரிசு படம் ஒரு நல்ல ஆறுதலாய் அமைந்தது. விஜய்யுடன் போட்டி போட்டு நடிக்கும் எதிர்மறை நாயகனாக தோன்றிய இவர் கோலிசோடா இயக்குநர் விஜய்மில்டனுடன் இணையவுள்ளார். இதில் ஷாமுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க, இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கு. வாரிசு படத்துல சின்ன கேரக்டர்ல வந்தாலும், இனிமேல் தனி கதாநாயகனா ஜொலிக்கலாம் அப்படினு கனவுகளோட சந்தோஷத்துல இருக்காரு ஷாம்

மேலும் படிக்க| மனித நரம்புகளில் கிடைத்த ‘மைக்ரோ’ ப்ளாஸ்டிக் துகள்கள்.