அரசின் சரியான திட்டமிடலால் மீண்ட தமிழகம்...முதலமைச்சர் பேட்டி!

அரசின் சரியான திட்டமிடலால் மீண்ட தமிழகம்...முதலமைச்சர் பேட்டி!

தமிழ்நாடு அரசு, சரியான திட்டமிடலுடன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், மாண்டஸ் புயலில் இருந்து, தமிழகம் முழுமையாக மீண்டுள்ளது  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதலமைச்சர் ஆய்வு:

மாண்டஸ் புயல் நேற்று இரவு கரையைக் கடந்த நிலையில், புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 

நிவாரணப்பொருட்களை வழங்கிய முதலமைச்சர்:

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள கொட்டிவாக்கம், நீலாங்கரை, பாலவாக்கம், பனையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.  தொடர்ந்து, ஈஞ்சம்பாக்கம்  சென்று ஆய்வு  மேற்கொண்ட அவர்,  கொட்டிவாக்கம் மற்றும் ஈஞ்சம்பாக்கம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். 

முழுமையாக மீண்ட தமிழகம்:

இதனைத் தொடர்ந்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை  நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உரிய திட்டமிடலுடன் அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் மாண்டஸ் புயலில் இருந்து, தமிழகம் முழுமையாக மீண்டுள்ளதாக கூறினார். மேலும், புயல் பாதிப்புகளை முழுமையாக கணக்கிட்ட பிறகு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும், தேவைப்பட்டால் மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும் என்றும் கூறினார்.

இந்த ஆய்வின் போது, அவருடன் அமைச்சர்கள் கே.என் நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.