மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்...விரைந்து முடிக்க அறிவுரை!

மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்...விரைந்து முடிக்க அறிவுரை!

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 80 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவித்துள்ளார்.

மழைநீர் வடிகால் பணி:

பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது. ஆனால், இப்பணிகளில் தொய்வு காணப்படுவதாக மக்கள் புகார் கூறியதை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்து வருகிறார். அந்தவரிசையில் இன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மற்றும் 6 மண்டலங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.  

இதையும் படிக்க: "திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்" புத்தகம் வெளியீடு!

பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர்:

குறிப்பாக சென்னை மண்டலம் 5க்கு உட்பட்ட என்.எஸ்.சி.போஸ் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம், வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சந்திப்பு பகுதிகளில் ஆய்வு செய்த அவர், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இதேபோல் மண்டலம் 6க்கு உட்பட்ட புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டெமெல்லோஸ் சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, கொளத்தூரில் உள்ள வேலவன் நகர், கோயில் தெரு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டார்.

80 சதவீதம் நிறைவு:

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், மழைநீர் வடிகால் பணிகள் கிட்டதட்ட 80 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்குள் இப்பணி நிறைவடைந்துவிடும் எனவும் கூறினார்.