அதிரடியான ஆபரேஷன் காவேரி ....! தமிழ்நாட்டு மக்கள் 9 பேர் மீட்பு.....! இதுவரை 2 ஆயிரம் இந்தியர்கள்..!

அதிரடியான ஆபரேஷன் காவேரி ....! தமிழ்நாட்டு மக்கள் 9 பேர் மீட்பு.....!  இதுவரை  2 ஆயிரம் இந்தியர்கள்..!

சூடான் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இருந்து இந்தியர்களை மீட்க மிஷன் காவேரி மூலம் இந்திய அரசாங்கம் சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது

உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இருந்து இதுவரை சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் மீட்டு வெளியேற்றப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே உள்நாட்டுப்போர் மூண்டுள்ளது. 

தலைநகர் கார்தூம் உள்பட நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து வெளிநாட்டு வாழ் மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் ஆபரேஷன் காவேரி என்ற திட்டத்தின் மூலம் இதுவரை ஒட்டுமொத்தமாக இதுவரை ஆயிரத்து 700 முதல் 2 ஆயிரம் இந்தியர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

Operation Kaveri: 72 Gujaratis To Reach Ahmedabad Post-Midnight After  Landing In Mumbai

மேலும்,  சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களில் தமிழர்களை கண்டறிந்து அவர்களை சொந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் முழு பொறுப்பையும் செலவையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. இந்நிலையில நேற்று இரவு டெல்லி வந்தடைந்த ஒன்பது தமிழர்களில்  ஐந்து நபர்கள் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். மேலும் அவர்கள், வருவாய் அதிகாரி தலைமையில் தங்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிக்க   }  'ஆபரேஷன் காவேரி' எதிரொலி...! சூடானிலிருந்து மீட்கப்பட்ட மதுரையை சேர்ந்த குடும்பம்...!

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மீட்கப்பட்ட நபர்கள் கூறுகையில்,.."கடந்த எட்டு ஆண்டுகளாக பார்த்த சூடானுக்கும் இந்த குறிப்பிட்ட போர் நடக்கும் வேலையில் இருக்கும் சூடானுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று கூறினர். மேலும், எங்கு திரும்பினாலும் துப்பாக்கி சூடு, கலவரம் என சூடானின் நிலையே அடிப்படையில் மாறியிருப்பதாகவும், இதனால் தங்கள் பொருளாதாரம்  முற்றிலும் தடைபட்டிருப்பதாகவும், வரட்டுத்தத்துடன் கூறினர்.

தொடர்ந்து, இத்தனை ஆண்டுகள் தாங்கள் சேர்த்து வைத்த அனைத்தையும் விட்டுவிட்டு கையில் ஒரே ஒரு பையுடன் தாயகம் திரும்பி இருப்பதாக வருத்தம் தெரிவித்தனர். அதோடு, போர் பதற்றம் முடிவுக்கு வந்தாலும் மீண்டும் சூடான் செல்லும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டனர். 

அதேபோல அங்கிருந்து தங்களை மீட்டு வர உதவியாக இருந்த இந்திய தூதரகத்திற்கும் மத்திய அரசுக்கும்
தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினர்.  அதிலும் குறிப்பாக தாயகம் திரும்ப உதவிய தமிழக அரசுக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தனர்.

இதையும் படிக்க   } கர்நாடக தேர்தல் களத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த பாஜக...!!