"மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக இல்லை... ஒற்றுமையும் அமைதியும் நிலவ அனைவரும் எப்போதும் ஒன்றாக நிற்க வேண்டும்.." - ஆற்காடு இளவரசர் நவாப்

"மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக இல்லை... ஒற்றுமையும் அமைதியும் நிலவ அனைவரும் எப்போதும் ஒன்றாக நிற்க வேண்டும்.." - ஆற்காடு இளவரசர்  நவாப்

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை வெகு சிறப்பாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், "ஈகைத் திருநாளில் இந்துக்கள் முஸ்லிம்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இருக்க நான் வேண்டுகிறேன்",  என முகமது அத்துல் அலி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை வெகு சிறப்பாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் மிகவும் பிரிபலமான திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர.  இந்த சிறப்பு தொழுகையில் ஆற்காடு இளவரசரான ஆற்காடு நவாப் முகமது அத்துல் அலி தனது மகன் நவாப் முகமது ஆசிப் அலி மற்றும் இரண்டு பேரன்களுடன் வருகை புரிந்து ரம்ஜான் தினத்தை முன்னிட்டு சிறப்பு தொழுகையில் பங்கெடுத்து கொண்டார்.

அப்போது ஆற்காடு இளவரசர் ஆற்காடு நவாப் அத்துல் அலி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 

ரம்ஜான் மாதம் முழுவதும் சென்னை மட்டுமல்லாது உலகம் முழுவதும் மிகச் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டுள்ளது. சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தன்னுடைய ஈகைத் திருநாளான ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், இந்த நாளில் இந்துக்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க தான் வேண்டுவதாகவும்,  ரம்ஜான் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு அளித்துள்ள தமிழ்நாடு அரசுக்கும்,காவல்துறைக்கும் நன்றிகளையும் கூறிக்கொண்டார்.

இதையும்  படிக்க   } ரம்ஜான் திருநாள்...முக்கிய தலைவர்கள் வாழ்த்து... !

மேலும் பேசிய அவர் அமைதியும் ஒற்றுமையும் நாட்டில் நிலைத்திருக்க வேண்டும். மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக இல்லை. ஒற்றுமையும் அமைதியும் நிலவ அனைவரும் எப்போதும் ஒன்றாக நிற்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும்  படிக்க   } இஸ்லாமிய மக்களைத் தாயன்போடு காப்போம்... மு.க.ஸ்டாலின்...!!