கருப்பு பூஞ்சை தொற்றுக்கு தேவையான மருந்துகளை மத்திய அரசு அனுப்பவில்லை: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 32,646 ஆக்சிஜன் மற்றும் சாதாரண படுக்கைகள் காலியாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு தேவையான மருந்துகளை மத்திய அரசு அனுப்பவில்லை: மா.சுப்பிரமணியன்

கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, உயிரிழப்பை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரானா தடுப்பு பணியில் புதிதாக 2,000 மருத்துவர்கள், 6,000 செவிலியர்கள், 3,700 மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் நேரில் ஆய்வு நடத்த உள்ளதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். 

அப்போது, நீலகிரியில் மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஆய்வு செய்ய உள்ளதாகவும்,  தமிழகத்தில் 660 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருப்பில் இருப்பதாகவும், இதனால் தட்டுப்பாடு இல்லை எனவும் அமைச்சர் கூறியதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, கரும்பூஞ்சை தொற்றுக்காக மத்திய அரசு 790 மருத்துகள் மட்டுமே ஒதுக்கியதாகவும், கூடுதலாக  30 ஆயிரம் மருந்துகள் தேவைப்படுவதால் அதுகுறித்து  மத்திய அரசிற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் அமைச்சர் அந்த தகவலில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் செங்கல்பட்டில் உள்ள  தடுப்பூசி உற்பத்தி மையத்தையும் விரைந்து தொடங்குவது குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், விரைவில் நல்ல முடிவினை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.