மனிதர்களை வேட்டையாடி வரும் புலியை சுட்டுக்கொல்ல வேண்டுமென பொதுமக்கள் போராட்டம்..

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் ஆட்கொல்லி புலியை  சுட்டுக் கொலை செய்து பிடிக்க வேண்டுமென வனத்துறை அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மனிதர்களை வேட்டையாடி வரும் புலியை சுட்டுக்கொல்ல வேண்டுமென பொதுமக்கள் போராட்டம்..

மசினகுடி மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும்  பொதுமக்கள் நான்கு பேரை புலி அடித்துக் கொன்றது. இதையடுத்து அதனைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புலி தொடர்ந்து போக்கு காட்டி வரும் நிலையில் அதனைக் கண்டுபிடிக்கும் பணியில் மோப்பநாய் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புலியை மயக்க ஊசி செலுத்தியோ  அல்லது  சுட்டுக் கொன்றோ பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என மசினக்குடி வனத்துறை அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புலியால் நேற்று அடித்துக் கொல்லப்பட்ட மங்களபசுவன் என்பவரது உடலுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து புலியை சுட்டுக் கொல்வதாக வனத்துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.