திமுகவுக்கு கொள்கையும், கூட்டணியும் ஒன்றுதான்...!! உதயநிதி ஸ்டாலின்...!!

திமுகவுக்கு கொள்கையும், கூட்டணியும் ஒன்றுதான்...!! உதயநிதி ஸ்டாலின்...!!

திமுகவுக்கு கொள்கையும், கூட்டணியும் ஒன்றுதான் என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொிவித்துள்ளாா். 

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி வளாகத்தில், திமுக மாநில சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மேடையில் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கூட்டணி வேறு, கொள்கை வேறு என்று கூறியதை சுட்டிக்காட்டிய அவர் திமுகவுக்கு கொள்கையும், கூட்டணியும் ஒன்றுதான் என தொிவித்தாா். தொடா்ந்து பேசிய அவா் திமுக இஸ்லாமியர்களுக்கு என்றும் துணை நிற்கும் எனவும் குறிப்பிட்டு பேசினாா்.

மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவருக்கும் பாதுகாவலராக கருணாநிதி இருந்தார். அந்த வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் செயல்படுகிறாா் என குறிப்பிட்டாா். தொடா்ந்து பேசிய அவா் அரசியலுக்கு வந்து பலமுறை கைதாகி உள்ளேன். குடியுாிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் சட்டத்தின் நகலை கிழித்து முதல் முறையாக கைதானது எப்போதும் மகிழ்ச்சி தருவதாக தொிவித்தாா்.

தொடா்ந்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக திகழும் வகையில் சமூக நீதியும், சமூக நல்லிணக்கமும் தழைத்து ஓங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்றாா்.

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மு.க.ஸ்டாலினுக்கு பின்னா் இஸ்லாமியர்கள் மற்றும்  சிறுபான்மையினர்களுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் இருப்பாா் என்றாா். மேலும் பேசிய அவா், சனாதனத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நாசர், செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.