"சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு சிறுபிள்ளைத்தனம்" அண்ணாமலை விமர்சனம்!

"சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு சிறுபிள்ளைத்தனம்" அண்ணாமலை விமர்சனம்!

"சனாதனம் பற்றிய உதயநிதியின் பேச்சு சிறுபிள்ளைத்தனம்" என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவரான அண்ணாமலை தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பம் நகரில் உள்ள சந்தைமேடு பகுதியில் தனது பாதயாத்திரை தொடங்கிய அண்ணாமலை, கம்பத்தின் முக்கிய வீதியான LF ROAD, சிக்னல், காந்தி சிலை வழியாக கம்பம் அரசு மருத்துவமனைக்கு வந்து தனது பாதயாத்திரையை நிறைவு செய்தார்.

பின்பு கம்பம் பார்க் திடலில் அமைக்கப்பட்டிருந்த பொதுக் கூட்ட மேடையில் உரையாற்றினார். அதில் கம்பம் நகரில் விளையக்கூடிய திராட்சைக்கு புவி சார் குறியீடு மத்திய அரசால் வழங்கப்பட்டதாக கூறிய அவர்,
வைகை அணையை தூர் வார வேண்டுமென கோரிக்கை வைத்தார். மேலும், முல்லைப் பெரியாறு அணையில் கேரள அரசு 152 அடி தண்ணீரை தேக்க விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டினார்.

சனாதான தர்மம் பற்றி முழுமையான தெரியாமல் சிறுவிலைத்தனமாக உதயநிதி பேசுவதாக குற்றம் சாட்டிய அண்ணாமலை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டும் என்பதற்காக 2024 தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டுமென்றார். 

முன்னதாக, நடைபயணம் மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேற்பட்ட பாஜகவினர் வரவேற்பளித்தனர். இந்த பாதயாத்திரை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிக்க:நடிகை விஜயலட்சுமி புகார்; சீமானுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்!