1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து ஆய்வு அறிக்கையை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.  

1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்

தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அறிக்கையை சமர்ப்பித்தார். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து, பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுதொடா்பாக, திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 
ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளை திறக்கலாம் என ஒரு தரப்பினரும், ஒன்றாம் வகுப்பு முதல் பள்ளிகளைத் திறக்கலாம் என மற்றொரு தரப்பினரும் பரிந்துரை செய்துள்ளதாக கூறியிருந்தார்.