தெப்பக்காடு யானைகள் முகாமில் உலக யானைகள் தின விழா கொண்டாட்டம்...

உலக யானைகள் தினத்தை ஒட்டி முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 29 வளர்ப்பு யானைகளுக்கு பிடித்தமான உணவுகள் வழங்கப்பட்டன...

தெப்பக்காடு யானைகள் முகாமில் உலக யானைகள் தின விழா கொண்டாட்டம்...

ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில் உலக யானைகள் தின விழா சிறப்பாக கொண்டப்பட்டது.

அதன்பின்னர் யானைகளுக்கு பிடித்தமான பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட்டது. அதிலும் முக்கியமாக முதுமலை புலிகள் காப்பக ஆதிவாசி குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் சிறுவர்கள் மூலம் யானைகளுக்கு பலாப்பழம், அண்ணாசி பழம், வாழை, மாதுளை, உள்ளிட்டவை யானைக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் அவர்களுக்கு யானையின் வாழ்க்கைமுறை, வனவளத்தில் யானையின் முக்கியத்துவம்,யானைகள் பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.