முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தப்படும்- விவசாய சங்க தலைவர் இளங்கீரன்  

  மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளதாக காவிரி டெல்டா விவசாய சங்க தலைவர் இளங்கீரன் தெரிவித்துள்ளார்.  

முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்தப்படும்- விவசாய சங்க தலைவர் இளங்கீரன்   

தென் சென்னை தலைமைச் செயலகத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தனர். பின் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து தமிழக முதல்வரை சந்தித்து இந்தியாவிற்கே வழிகாட்டியாக வேளாண் தனி நிதிநிலை அறிக்கையை  அறிவித்ததை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளோம். ஆட்சி அமைத்த 100 நாட்களுக்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை அறிவித்ததை கொண்டாடும் விதமாக தமிழக முதல்வரை சந்தித்து மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துள்ளோம் என்றார்.

கடந்த ஆட்சியில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்கள் அனைத்தையும் மத்தியகால மாற்று கடனாக மாற்றப்பட்டு உள்ளது. இதனை பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் சேர்த்து விவசாய கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முக்கிய கோரிக்கையாக இந்த அரசு டில்லியில் போராடிய விவசாயிகளினுடைய கஷ்டத்தை உணர்ந்து 3 வேளாண் சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைபடுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள், அதற்காகவும் தமிழகத்தின் அனைத்து விவசாயிகள் சங்கங்களும் இணைந்து ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் அதற்கு முதல்வர் ஜனவரியில் கண்டிப்பாக தேதி தருவதாக உறுதியளித்துள்ளார்.