"மாநகர பேருந்துகள் முழு பயண நடைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்" போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்!!

"மாநகர பேருந்துகள் முழு பயண நடைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்" போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்!!

மாநகர பேருந்துகள் முழு நடையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அதாவது, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து வழித்தட பேருந்துகளும் கால அட்டவணைப்படி இயக்கவும், இவ்வாறு தடத்தில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் முழு பயண நடைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், போக்குவரத்து நெரிசல் மற்றும் இதர காரணங்களால் அட்டவணைப்படி முழு பயண நடைகளை பூர்த்தி செய்வதற்கு மிகைப் பணி ஊதியம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதையெல்லாம் கருத்திற்கொண்டு, முழு பயண நடைகளையும் இயக்கி, மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாகத்துக்கு நற்பெயரும், வருவாயையும் பெருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுவதாகவும், போக்குவரத்துத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிக்க || "ஆளுநர் தமிழிசை செளந்தராஜனின் திடீர் அறிவிப்புகளுக்கு இது தான் காரணம்" நாராயணசாமி குற்றச்சாட்டு!!