நிலத்தடி நீரின் தன்மை மாறிவிட்டதாக கூறி போராட்டம்!

நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலை தொடர்ந்து கெடிலம் ஆற்றில் கழிவு நீரை கலப்பதால் கடலூர் நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

நிலத்தடி நீரின் தன்மை மாறிவிட்டதாக கூறி போராட்டம்!

கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பில் கெடிலம் ஆற்றில் நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலை கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரியும் கெடிலம் மற்றும் தென்பெண்ணை ஆற்றின் கறைகளை உயர்த்தி வெள்ளத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளை பாதுகாக்க கோரியும் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியிருப்போர் நல சங்கங்கள் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பினர் கலந்து கொண்ட நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் வீட்டில் வரும் நிலத்தடி நீரை பாட்டிலில் பிடித்து வந்திருந்தனர். மஞ்சள், சிகப்பு, ஊதா என பல வண்ணங்களில் இந்த தண்ணீர் இருந்த நிலையில் இவற்றை கையில் பிடித்தபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலை தொடர்ந்து கெடிலம் ஆற்றில் கழிவு நீரை கலப்பதால் கடலூர் நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிய பொதுநல அமைப்பினர், மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

மேலும் மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் கடலூர் நகருக்குள் தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆறு செல்லும் கரைகளை பலப்படுத்தி குடியிருப்பு வாசிகளை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.