அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த சீமான்!

அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த சீமான்!

தன்னை சந்திக்க வந்த இசுலாமிய பிரதிநிதிகளை, அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் மட்டும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, அவர்களை நிற்க வைத்து பேசி அனுப்பியதை, கண்டித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில், பரங்கிப்பேட்டை ஜமாத்தை சேர்ந்த இசுலாமிய பிரதிநிதிகள், தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வதை சந்திக்க சென்றுள்ளனர். அப்பொழுது, அமைச்சர் மட்டும், நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுகொண்டு, தன்னை சந்திக்க வந்தவர்களை, அருகில் நாற்காலிகள் இருந்தும், நிற்க வைத்தே பேசி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இன்று காலை நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது, சமூகநீதி காவலர்கள் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்ளும், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சருமான, எம் ஆர் கே பன்னீர் செல்வம் அவர்கள், தான் மட்டும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தம்மை சந்திக்க வந்த பரங்கிப்பேட்டை ஜமாத்தை சேர்ந்த இசுலாமிய பிரதிநிதிகளை நாற்காலிகள், இருந்தும் நிற்கவைத்தே பேசி அனுப்பியுள்ளார். இது தான் திமுக கடைபிடிக்கும் சமத்துவம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இசுலாமிய பெருமக்களை வெறும் வாக்கு வங்கிகளாக இன்னும் எத்தனை காலத்திற்கு திமுக ஏமாற்றப்போகிறது? இசுலாமிய வாக்குகள் வேண்டும், அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வேண்டாமா? சட்டமன்றத்திலும், இசுலாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் இசுலாமியர்களை சமமாக உட்கார வைக்கவும் கூடவா மனமில்லை ? என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சகா மனிதர்களை மரியாதையோடு நடத்தும் அடிப்படை மனித பண்புகூட இல்லாமல் நடந்துகொள்வது தான், திராவிட மாடலா? என கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: விசாரணைக்கு சென்ற காவலர்களை, ஆயுதத்துடன் மிரட்டிய ஆசாமிகள்!