துணை ஆட்சியர் உள்ளிட்ட குரூப் 1 தேர்வுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்-தேர்வாணையம் தகவல்!

துணை ஆட்சியர் உள்ளிட்ட குரூப் 1 தேர்வுக்கு 3 லட்சம் பேர் விண்ணப்பம்-தேர்வாணையம் தகவல்!

அரசுத் துறையின் முக்கிய பணியாகிய துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப் 1 பணியில் காலியாக உள்ள 92 பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் முடிந்தது. இத்தேர்வுக்கு  3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இறுதி நாளான நேற்று நள்ளிரவு வரை ஏராளமானோர் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பித்தனர். இது குறித்து தேர்வாணைய செயலாளர் உமா மகேஸ்வரி கூறுகையில், ”டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு 3  லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பித்தவர் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வரும் 27ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் 29ம் தேதி நள்ளிரவு 11. 59 மணி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.” என்றார். குரூப் 1 தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், ஒரு பதவிக்கு 3442 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.