சந்திராயன் -3 குறித்து புதிய அப்டேட் கொடுத்த இஸ்ரோ...!

சந்திராயன் -3  குறித்து  புதிய அப்டேட் கொடுத்த  இஸ்ரோ...!

சந்திரயான் 3 விண்கலத்தின் 2ம் புவி சுற்றுப்பாதையை அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
 
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் 615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், கடந்த 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரையிரங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் 2ம் புவி சுற்றுப்பாதையை அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த பணிகள் நாளை மதியம் 2 மணிக்கு முன்னெடுக்கப்படும் எனவும் இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க    |