தேர்தலில் வெற்றி பெற பாஜக எதை வேண்டுமானாலும் செய்யும்...!அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

தேர்தலில் வெற்றி பெற பாஜக எதை வேண்டுமானாலும் செய்யும்...!அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

ஹெலிகாப்டரில் ஏற விடாமல் பாஜக தலைமையிலான மத்திய அரசு தன்னை காக்க வைத்ததாகவும் இதனை தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் எனவும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் மதியம் 1 மணிக்கு திட்டமிட்டிருந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட அகிலேஷ் யாதவின் ஹெலிகாப்டருக்கு விமான போக்குவரத்து அதிகாரிகள் அனுமதி வழங்க தாமதித்ததாகவும், இதனால் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்ட நேரத்தில் அகிலேஷ் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கு மத்திய பாஜக அரசு தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள அகிலேஷ் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற பாஜக எதை வேண்டுமானாலும் செய்யும் எனவும் அகிலேஷ் குற்றம் சாடியுள்ளார்.