சாலை தகராறு : பைக்கில் சென்றவரை இடித்து கீழே தள்ளிய கார் ஓட்டுநர் - அதிர்ச்சி வீடியோ வைரல்

டெல்லியில் பைக்கில் சென்றவரை, காரில் சென்ற நபர் சர்வ சாதாரணமாக இடித்துவிட்டு தப்பிச்சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலை தகராறு : பைக்கில் சென்றவரை இடித்து கீழே தள்ளிய கார் ஓட்டுநர் - அதிர்ச்சி வீடியோ வைரல்

டெல்லி அர்ஜன் ஹர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, பைக்கில் சென்றவருக்கும், காரில் சென்றவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாய் தகராறு முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் டூவீலரில் சென்ற நபர் அங்கிருந்து வேகமாக சென்றுள்ளார்.

இந்தநிலையில் தீராத ஆத்திரத்தில் இருந்த கார் ஓட்டுனர், இரு சக்கர வாகனத்தை வேகமாக பின்தொடர்ந்து சென்று, இடித்து விட்டு தப்பி சென்றார். இந்த பரபரப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் அதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.