போர்களுக்கு இடையில், சிரியாவில் கைவிடப்பட்ட பொழுதுபோக்கு பூங்காவை அழகாகக் காட்டிய பால்வீதி வெளிச்சம்:

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கைவிடப்பட்ட பொழுது போக்கு பூங்காவில் அழகான பால்வீதி மண்டலத்தின் சுழற்சி டைம் லாப்ஸ் முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

போர்களுக்கு இடையில், சிரியாவில் கைவிடப்பட்ட பொழுதுபோக்கு பூங்காவை அழகாகக் காட்டிய பால்வீதி வெளிச்சம்:

சிரியா என்றாலே, வெடிக்கும் குண்டுகள், நடக்கும் போர்கள் பற்றி தான் நினைவுக்கு வரும். கதறும் கூக்குறல்களுக்கு இடையிலும், ஒரு சில நெகிழ வைக்கும் சம்பவங்கள் அங்கு நடந்து கொண்டு தான் இருக்கின்றன என இங்கு நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் மூண்டிருக்கும் நிலையில், வன்முறையில் இருந்து தப்பிக்க சிரியர்கள் ஏராளமானோர் தங்களது வீடுகளையும் நாட்டையும் விட்டு வெளியேறி வருகின்றனர். பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என, இது வரை குறைந்தது 8, 75,000 சிரிய மக்கள், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்குக்கு எதிரான, ரஷ்ய ஆதரவுடன் சிரிய அரசாங்கத்தின் தாக்குதலில் இருந்து தப்பி ஓடிவிட்டனர் என ஒரு சில தகவல்கள் கூற, பலரும் தப்பி செல்லும் போது இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிரிய குழந்தைகளின் உடல்கள் மிதக்கும் போட்டோக்கள், போர் குண்டுகளால் தாக்கப்பட்ட குழந்தைகள் அழும் போட்டோக்கள் போன்றவற்றயே பார்த்து பார்த்து மனம் வரண்டு போன நமக்கு, ஒரு படம் நெகிழ வைத்திருக்கிறது.

அல் நய்ரப் நகரத்தில், அரசுப் படைகள் இருக்கும் பகுதிக்கும், கிளர்ச்சிப் படைகள் இருக்கும் பகுதிக்கும் இடையில் இருக்கும் இடத்தில் ஒரு பெரிய பொழுது போக்கு பூங்கா இருந்தது. தொடரும் போர்களால், அந்த பூங்க, பல ஆண்டுகளாக கைவிடப்பட்டு இருந்தது. அங்கு, அழியும் நிலையில் இருக்கும் இருக்கும் அந்த பொழுது போக்கு பூங்காவை வானத்தில் இருக்கும் பால்வீதி அழகுப் படுத்தியுள்ளது.

இரவு நேரத்தில் ஒளிரும் நட்சத்திர கடலில் மூழ்கி இருந்த அந்த சீர்குலைந்த கட்டிட அமைப்புகளை, டைம் லாப்ஸ் என்ற முறையில் படம் பிடிக்கப்பட்டு, அந்த வீடியோவை, சமூக தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த அழகான வீடியோவை எடுத்த சிரியாவின் புகைப்பட பத்திரிக்கையாளர் ஒமர் ஹஜ் கடோர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பாராட்டுகளை பெற்று வருகிறார். மேலும், இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.