லாலு பிரசாத் யாதவ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!

லாலு பிரசாத் யாதவ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து...!

மூத்த அரசியல் தலைவர் லாலு பிரசாத் யாதவ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அரசியல் தலைவர் லாலு பிரசாத் யாதவ்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், கண்ணியத்திற்கு அவர் கொடுத்த முக்கியத்துவம், தந்தை பெரியாரால் வழிநடத்தப்பட்ட நமது சுயமரியாதை இயக்கத்தின் அரசியலுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : அய்யய்யோ...மீண்டும் மீண்டுமா...சென்னையில் தடம் புரண்ட ரயில்!

வட இந்தியாவில் மண்டல் அரசியலை வலுப்படுத்த மக்கள் சேவையில் இன்னும் பல ஆண்டுகள் சுறுசுறுப்பாக இருக்க வாழ்த்துவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்ந்து மற்றுமொரு ட்வீட்டில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள சுப்ரியா சூல் மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.