முதல்வர் ஸ்டாலின் அவர்களே,.. குஷ்பூ- வை சீண்டி பாக்கதீங்க; தாங்க மாட்டீங்க..!  - குஷ்பு ஆவேசம்.

" என்னால் செருப்பால் அடிக்க முடியும் "

முதல்வர் ஸ்டாலின் அவர்களே,.. குஷ்பூ- வை சீண்டி பாக்கதீங்க;  தாங்க மாட்டீங்க..!  - குஷ்பு ஆவேசம்.


சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியது தொடர்பாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

" பொது மேடையில் மகளிர் பற்றி பேசியதால் இதற்கு முன்னதாக திமுக பேச்சாளர் தற்காலிக நீக்கம் செய்தும்  கட்சியில் மீண்டும் காலில் விழுந்து இணைந்தார்.பெண்களின் பாதுகாப்பு உறுதி இல்லாமல் இருப்பது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும்,பெண்களை பற்றி தரைகுறைவாக பேச யாருக்கும் உரிமை கிடையாது",  என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,  தனிப்பட்ட பிரச்சனையில் நான் பேசவில்லை என்றும் அனைத்து பெண்களுக்கும் சேர்த்து தான்  பேசுகிறேன் என கூறினார். அதோடு, " தற்போது அனைத்து திமுக உறுப்பினர்களும்,  செந்தில் பாலாஜி நம்மை மாட்டிவிட்டுவிடுவாரோ ? என்ற பயத்தில் தான் தற்போது பெண்களை பற்றி பேசி .திமுகாவில் பேச்சாளர்களை தீனி போட்டு வளக்கிறார்கள்.தேசிய மகளிர் ஆணை உறுப்பினராக சொல்கிறேன். திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பில் புகார் கொடுக்க உள்ளோம்”,  என்றார்.

DMKs Shivaji Krishnamoorthy erupts controversy again, NCW Member Kushpoo seeks action and Condemn


மேலும், " முதலமைச்சர் முக ஸ்டாலினை பார்த்து தான் நேரடியாக சொல்கிறேன்: குஷ்பூ- வை சீண்டி பார்க்காதீர்கள். குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகத்தினருக்கு என்றார்.என்னால் செருப்பால் அடிக்க முடியும். ஆனால் அடிக்க மாட்டேன் அது செருப்புக்கு தான் கேவலம். திமுக கட்சியில் உள்ளவர்கள் பெண்களை பற்றி இழிவாக பேசிவதை ரசிக்கிறார்கள்; நான் மன்னிப்பேன்,.. ஆனால் மறக்க மாட்டேன்.." என்றும் சாடினார். 

கலைஞர் அடிக்கடி மேடைநாகரீகம் பற்றி பேசுவார் எனவும், ஆனால், தற்போதுள்ள திமுக கதவ்ஹியினர் பெண்களை குறித்து அவதூறாக பேசிக்கொண்டே இன்பம் காண்கின்றனர் என்றும்,  கலைஞர் ஆட்சியில் உள்ள திமுகவிற்கு தற்போது முக ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கும் இது தான் வித்தியாசம். என கூறினார்.

அதோடு, எந்த ஆணுக்கும் பெண்களை பற்றி இழிவாக பேச உரிமையில்லை குறிப்பாக தந்தைக்கும், கணவனுக்குமே  உரிமை இல்லாத போது, பொதுவெளியில் பேசுபவர்களுக்கு எப்படி உரிமை வந்தது", என காட்டத்துடன் பேசினார். 

தொடர்ந்து பேசிய அவர்,  தான் யாரையும் நம்பி தமிழகத்திற்கு  வரவில்லை என்றும், தன் திறமையை நம்பி தான் வந்ததாகவும், அதோடு, தான்  இன்று இப்படி பேசவில்லை என்றால் தன் மகளுக்கு நான் எப்படி முன் உதாரணமாக இருப்பேன்.என் அம்மா எனக்கு பால் மட்டும் கொடுக்கவில்லை தைரியம் கொடுத்து வளர்த்து இருக்கிறார்கள்.பேசுவதற்கு எப்படி தைரியம் வந்தது அவன் ஒரு தாய்க்கு பிறந்தவன் தானே என ஆவேசப்பட்டு பேசினார். 

மேலும், பெண்களை பற்றி அவதூறு பேசியதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆணையத்தின் சார்பாக புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.   

 இதையும் படிக்க    | நீட் தேர்வு முடிவுகள் சமூக நீதிக்கு எதிரானது...ரத்து செய்வதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஓபிஎஸ்!