"கலெக்டரிடம் சென்று மின் இணைப்பு கேளுங்கள், இல்லையெனில் ரூ 10 லட்சம் கொடுங்கள்": மின் ஊழியர் சர்ச்சை பேச்சு!

"கலெக்டரிடம் சென்று மின் இணைப்பு கேளுங்கள், இல்லையெனில் ரூ 10 லட்சம் கொடுங்கள்": மின் ஊழியர் சர்ச்சை பேச்சு!

திருச்சியில், கோவிலுக்கு மின் இனிப்பு கேட்டு சென்றவர்களிடம் ஆட்சியர் பற்றி அவதூறாக பேசியும், ரூ 10 லட்சம் கேட்டும் மின் வாரிய அதிகாரி ஒருவர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கல்லக்குடி மின்நிலையத்தில், ஸ்ரீதர் என்பவர்  இளநிலை பொறியாளராக (JE) பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கல்லக்குடி புதிய சமத்துவபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு அப்பகுதிமக்கள் மின் இணைப்பு வேண்டி கேட்டுள்ளனர்.

மின் இணைப்பு கேட்டு வந்தவர்களை, நீங்கள் மின் இணைப்பு கேட்கும் கோவிலுக்கு, மின் இணைப்பு தாரா வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால் அதற்கு முன்பு விஏஓ-விடம் ஒரு கடிதமும், தாசில்தாரிடம் ஒரு கடிதமும் பெற்று வாருங்கள் என்று கூறியுள்ளார். 

இதனிடையே, மாவட்ட ஆட்சியரையும் தரக்குறைவாக பேசியுள்ளார். ஆட்சியரை அடித்து, அவர் சட்டையை பிடித்து மின் இணைப்பு வேண்டுமென கேளுங்கள். அவர் சொன்னால், அடுத்த நொடியே மின் இணைப்பு தருகிறேன் எனவும் கூறியுள்ளார்.   

மேலும் கோயில் பேரில் தடையில்லா சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் மற்றும் தாசில்தாரிடமும் வாங்கி வாருங்கள், நான் மின் இணைப்பு தருகிறேன் என்றும், நீங்கள் சொல்லுவதை எழுதிக் கொடுக்க வேண்டும் என்றால் மாதம் எனக்கு 10 லட்சம் தருகிறீர்களா என்று கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சமூகவலைத்தலங்களில் வீடியோ வைரலானதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரும், மினா வாரிய உயர் அதிகாரிகளும், ஸ்ரீதர் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

மேலும், 2 - மாதத்திற்கு முன் இவர் லஞ்சம் வாங்கிய புகாரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றம் நீரூபணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: குப்பைத் தொட்டியில் நாட்டு துப்பாக்கி: காவல் நிலையத்தில் ஒப்படைத்த துப்பரவு பணியாளர்கள்!