வடமாநில பயணியை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில்,...ரயில்வே அதிகாரிகள் சஸ்பெண்ட்

வடமாநில பயணியை கன்னத்தில் அறைந்த விவகாரத்தில்,...ரயில்வே அதிகாரிகள் சஸ்பெண்ட்

பெரம்பூரில் வடமாநில இளைஞரை பெண் டிக்கெட் பரிசோதகர் கன்னத்தில் அறைந்த சம்பவத்தில் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யபட்டனர். 

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று பிளாட்பார்ம்  டிக்கெட் எடுக்காதவர்களை சோதனை செய்யும் பணியில் துணை தலைமை டிக்கெட் பரிசோதகர் அக்‍ஷயா என்பவர் பணியில் இருந்தார். அப்போது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வருகை தந்துள்ளனர்.

அவர்களிடம் பிளாட்பார்ம் டிக்கெட் உள்ளதா என கேட்டு விரட்டி பிடித்துள்ளார். அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர்  பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாமல் இருந்ததை அடுத்து அவரை டிக்கெட் பரிசோதகர் அலுவலகத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போது அந்த அறையில் தலைமை டிக்கெட் பரிசோதகர் ஹரிஜான் என்பவரும் இருந்துள்ளார். வடமாநில இளைஞருக்கும் துணை டிக்கெட் பரிசோதகர் அக்ஷயாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் டிக்கெட் எடுக்காததை ஒத்து கொள்ளாத காரணத்தால் அவரை துணை டிக்கெட் பரிசோதகர் அக்‍ஷயா கை நீட்டி கன்னத்தில் அடித்தார்.

டிக்கெட் பரிசோதகர் வடமாநில இளைஞரை கைநீட்டி அடிக்கும் சம்பவத்தை வீடியோ எடுத்த ஒருவர் அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய ரயில்வே நிர்வாகம்  துணை தலைமை டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா மற்றும் தலைமை டிக்கெட் பரிசோதகர் ஹரி ஜான் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனை யடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து ரயில்வே துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க    |  ”திருநாவுக்கரசர் கொள்கை இல்லாதவர்” - கே.பி. முனுசாமி.