இதெல்லாம் ஒரு ஆர்ட்-ஆ? தவறான வழிநடத்தலுக்காக 95 லட்சம் கேட்டு வழக்கு பதிவு!!!

யாராலும் நம்ப முடியாத ஒரு விஷயத்தை ‘கலை’ பொருளென விளம்பரப்படுத்தி, அதனை விற்பனையும் செய்திருக்கிறார் ஒருவர். அவருக்கு 95 லட்சம் அபராத விதிக்கப்பட்டுள்ளது.

இதெல்லாம் ஒரு ஆர்ட்-ஆ? தவறான வழிநடத்தலுக்காக 95 லட்சம் கேட்டு வழக்கு பதிவு!!!

தோழா படம் அனைவரும் கண்டுகளித்திருப்போம். கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா, பிரகாஷ் ராஜ் நடிப்பில், வெளியான இந்த படம் பல வகையான நகைச்சுவை காட்சிகளைக் கொண்டிருக்கும், குறிப்பாக, கார்த்தி, தனது கலை திறனை வெளிப்படுத்தும் பெயரில், பெயிண்டை கண்ட படி தெளித்து அதனை ஒரு சர்வதேச வகையில் இருக்கும் ஓவியம் என, பிரகாஷ் ராஜிற்கு விற்று விடுவார்.

அது எவ்வளவு நகைச்சுவையாக இருந்தாலும், உண்மையில் யார் இப்படியெல்லாம் விசித்திரமாக இருப்பதை கலை பொருள் என விற்கப்போகிறார் என பலரும் கேள்வி எழுப்பி இருப்பர். ஆனால், அப்படி நிஜ வாழ்க்கையில் யார் செய்ய போகிறார்கள் என கேள்வி வரும் இல்லையா? அது நிஜ வாழ்க்கையில் நடந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? ஆம்! ஒரு மளிகை கடையில் வாங்கிய வாழைப்பழத்தை, டேப் வைத்து சுவற்றில் ஒட்டி, அதனை ஒரு சிறந்த கலைப்பொருள் என்ற பெயரில், சுமார் 1,20,000 டாலர்கள் மதிப்பிற்கு, அதாவது இந்திய பண மதிப்பில், சுமார் ரூ 95 லட்சத்திற்கு விற்பனை செய்திறுக்கிறார் ஒரு கலைஞர்.

MIAMI BEACH, FL - DECEMBER 06:  People post in front of Maurizio Cattelan's

இத்தாலியைச் சேர்ந்த கலைஞர் Maurizio Cattelan தான் இந்த விசித்திர கலையை விற்றவர். ஆனால் இது முதல் முறையல்ல, இது வரை பல கலைகள் மக்களை வியக்க வைக்கும் அளவிற்கு காட்சியப்படுத்தி எப்போதும் அனைவரது கவனத்தையும் பெறுபவராக இருந்திருக்கிறார்.

கடந்த 2019ம் ஆண்டு, மியாமியில் நடந்த கண்காட்சி ஒன்றில், வால்மார்ட் என்ற பிரபல கடையில் பழுத்த வாழைப்பழம் வாங்கி, அதனை மிகவும் கடுமையான மற்றும் திடமான டேப் எனக் கூறப்படும் ‘டக்ட் டேப்’ வைத்து சுவற்றில் ஒட்டி வைத்தார். மேலும் அதற்கு, ‘காமெடியன்’ என்ற தலைப்பும் வைத்து ஒரு சிறப்பான ஆர்ட் என சுமார் 1,20,000 டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளார். பின், ஒருவர் அந்த வாழைப்பழத்தை எடுத்து பிரித்து சாப்பிட்ட காமெடியும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம், மக்களிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும் மீம் கிரியேட்டர்களுக்கு இது பெரும் கண்டெண்டாகவே அமைந்தது. அப்படிப்பார்த்தால், நானும் இந்த உலகிலேயே மிகச்சிறந்த கலைஞன் தானே என பலரும் தங்களது சோசியல் மீடியாக்களில், அவரது ஆர்ட்-டைப் போல, வாழைப்பழம், ஆரஞ்சு பழம், எலுமிச்சை என மற்ற பழங்களை டக்ட் டேப் வைத்து சுவற்றில் ஒட்டி பதிவிடத்துவங்கி விட்டனர்.

இதுவே பெரும் சர்ச்சையாக இருக்க, கடந்த ஆண்டும் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜோ மோர்ஃபோர்ட் (Joe Morford) என்பவர், இது போல, தான் ஏற்கனவே செய்ததாகவும், இந்த கலை தனது என்றும் கூறி, காபிரைட் அதாவது காப்புரிமையைக் கோரி, மௌரிஷியா மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கைக் கையாண்ட அமெரிக்க மாவட்ட நீதிபதி ராபர்ட் என் ஸ்கோலா என்பவர், “வாழைப்பழத்தை சுவற்றில் ஒட்ட வைத்தால் அதுவெல்லம் ஒரு கலையாகுமா? அப்போது கலை என்பது அழகாக இருக்க வேண்டாமா? கிரியேட்டிவாக இருக்க வேண்டுமா? மனதை வருடும் வகையில் இருக்க வேண்டுமா? ஒரு வாழைப்பழத்தை சுவற்றில் டேப் போட்டு ஒட்டுவது அழகாக இல்லாமலும், மனிதனின் கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் இல்லை என்றாலும், மனிதர்களின் மனதில் ஒரு நர்ச்சியைக் கிளப்பும். அது நல்லதாகவும் இருக்கலாம் தீயதாகவும் இருக்கலாம். அதனால், வழைப்பழத்தை சுவற்றில் ஒட்டுவது ஒரு கலையாகவும், அதற்கு காபிரைட்டும் வழங்க முடியாது. ஆனால், அந்த ஐடியா-விற்கு காபிரைட் வழங்கப்படலாம். ஏன் என்றால், இது போல வாழைப்பழத்தை ஒட்டி, அதனை கலை என மக்கள் மத்தியில் வெளிப்படுத்தும் எண்ணமே விசித்திரமானது” என்று கூறி இந்த வழக்கை, வருகிற 2023 மே மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.

இது போன்றவையெல்லாம் எப்படி கலை ஆகும், அதற்கு காபிட்ரைட் வேறையா என, பல நெட்டிசன்கள் இந்த விசித்திர சம்பவம் குறித்து இணையத்தில் பதிவிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தி வர, ஒரு சிலர் இந்த சம்பவம், அந்த கலையின் தலைப்பான ‘காமெடியன்’ என்பதற்கு ஏற்ப காமெடியாகவே இருக்கிறது என்று கேளி செய்து வருகின்றனர்.