ரசிகனை மகிழ்வித்த கமல் – வீடியோ வைரல்

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது ரசிகரிடம் நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான கமலஹாசன் வீடியோ கால் மூலம் பேசிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

ரசிகனை மகிழ்வித்த கமல் – வீடியோ வைரல்

மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது ரசிகரிடம் நடிகரும் மக்கள் நீதி மைய தலைவருமான கமலஹாசன் வீடியோ கால் மூலம் பேசிய காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் கமலஹாசன். உலக நாயகன் என்ற புனைப்பெயர் கொண்ட இவர் தற்போது அரசியலில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி நடந்த முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

இந்நிலையில், கமலின் தீவிர ரசிகரான சாகெத் என்பவர் மூளை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததையும், அவர் கமலை பார்க்க ஆசைப்பட்டதும் கமலுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து மூளை புற்றுநோயுடன் போராடி வந்த சாகதெ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசி மகிழ்வித்துள்ளார் கமல். அப்போது சாகெத் தனது மகனுக்கு விருமாண்டி எனப் பெயரிட்டதை கூட நெகிழ்ந்துபோகிறார் கமல். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாக நடிகர் கமல்ஹாசனை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.