ஸ்வீடன் நாட்டு மணமகனை கரம் பிடித்த மதுரை பெண்!

ஸ்வீடன் நாட்டு மணமகனை கரம் பிடித்த மதுரை பெண்!

மதுரையில் தமிழ் பாரம்பரிய முறைபடி ஸ்வீடன் நாட்டு மணமகனுக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த மணமகளுக்கும் ஆன திருமணம் கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது.

மதுரையைச் சேர்ந்த திருச்செல்வன் மற்றும் அனுசுயா தம்பதியினரின் மகள் நிவேதிகா, ஸ்வீடன் நாட்டில் மேற்படிப்பு படிக்க சென்றுள்ளார். படிப்பை முடித்துவிட்டு அங்கேயே பொறியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், அங்கு யோகா ஆசிரியராக உள்ள எட்வர்ட் வீம் என்பவரை காதலித்து வந்துள்ளார். அதைத்  தொடர்ந்து, இதுகுறித்து இரு வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழக பாரம்பரியம் குறித்து, எட்வர்ட் வீம்-ன் பெற்றோரிடம் நிவேதிகா கூறியதும், தமிழ் பாரம்பரியம் பிடித்துப் போனதாகவும், இரு வீட்டார் சம்மதத்துடன் தமிழ் பாரம்பரிய முறைப்படி இன்று மதுரை தனக்கன்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணத்திற்காக  ஸ்வீடன் நாட்டில் இருந்து மணமகனின் பெற்றோர், உறவினர், நண்பர்கள் மதுரையில் தங்கியிருந்து தமிழக முறைப்படி கோலாகலமாக நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்டனர்.

ஸ்வீடன் நாட்டின் மணமகனை தமிழகச் சேர்ந்த பெண் தமிழக பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்தது நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: குட்டிகளை தோளில் சுமந்து தாய் கரடி சாலையில் உலா... பொதுமக்கள் அச்சம்!!