விண்வெளியில் துணி துவைக்க!!விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX !!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு அனுப்பப்பட்ட பரிசு பொருட்களில் சலவை சோப்பு அனுப்பிய வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது

விண்வெளியில் துணி துவைக்க!!விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX !!

விண்வெளி வீரர்களுக்கு அவர்களின் துணிகளை துவைக்க உதவும் வகையில் ஸ்பேஸ்எக்ஸ் சலவை சோப்பை அனுப்பியுள்ளது.புதன்கிழமையன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு SpaceX தனது கிறிஸ்துமஸ் பரிசு பொருட்களை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

Proctor and Gamble நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சலவை சோப்பு விண்வெளியில் துணிகளை துவைக்க உதவுமா என்பதனை கண்டறியும் ஒரு பரிசோதனையாக அமையும் எனவும் இதை அனுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விண்வெளி நிலையத்தில் இருப்பவர்களின் வாழக்கை சிரமமாக உள்ளதாகவும் அங்கு நடக்கும் மர்மங்களையும்  ரகசியங்களையும் தெரிந்து கொள்வதற்காக விண்வெளிக்கு சென்ற வீரர்கள் மாதக்கணக்கில் இருந்து வருவதாகவும்,விண்வெளியில் அவர்கள் சாப்பிடுவது தூங்குவது போன்ற வேலைகளை செய்து வருவது புதுவிதமாக இருக்கும் இதனால் விண்வெள் வீரர்கள் அவர்களது துணிகளை துவைக்க முடியாத நிலையில் இருந்து வருவதாகவும்,இதனை முயற்சி செய்து பார்க்கும் வகையில் விண்வெளிக்கு சலவை சோப்பை அனுப்பியுள்ளதாக தகவலள் வெளிவந்துள்ளது.

நாசாவில் சலவை வசதி இல்லாத காரணத்தால் அங்குள்ள விண்வெளி வீரர்களுக்கு ஆண்டுதோறும் 72 கிலோகிராம் ஆடைகளை அவர்களுக்கு அனுப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளது.விண்வெளிக்கென சலவை செய்வதற்காக சோப்பை தயாரிக்க புரோக்டர் மற்றூம் கேம்பிள் நிறுவனத்துடன் நாசா தற்போது கை கோர்த்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்கனவே நாசா தேவையான உபகரணங்களை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.விண்வெளி வீரர்கள் நீண்ட பயணங்களை மேற்கொள்ள தொடங்கினால் துணி துவைப்பது என்பது அவசியமான ஒன்றாகும்.தற்போது இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தால் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம் போன்ற நீண்ட பயணங்கள் வெற்றிகரமாக நடைபெற இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.