நாணயங்களால் அலங்கரிப்பட்ட கிச்சன்

இங்கிலாந்தில் 9 மணி நேரத்தில் பெண் ஒருவர் அவர் வீட்டு சமையலறையை 7500 காசுகளை கொண்டு மாற்றிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாணயங்களால் அலங்கரிப்பட்ட கிச்சன்

இங்கிலாந்தில் 9 மணி நேரத்தில் பெண் ஒருவர் அவர் வீட்டு சமையலறையை 7500 காசுகளை கொண்டு மாற்றிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பல்வேறு நாடுகள் ஊரடங்களை அமல்படுத்தி வருகின்றன. இதனால் ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத இளைஞர்கள் செல்போனில் மூழ்கி வருவது ஒரு பக்கம் இருந்தாலும், வீட்டு பெண்மணிகள் விதவிதமான சமையல்களை செய்து குடும்பத்தினரை மகிழ்வித்து வருகின்றனர். ஆனால், இங்கிலாந்தின் பர்ன்லி பகுதிய சேர்ந்த பில்லி ஜோ வெல்ஸ்பி என்ற பெண் ஊரடங்கு காலத்தில் மற்ற வீட்டுபெண்மணிகள் போல் இல்லாமல் அவரது வீட்டை காசுகளால் கொண்டு அலங்கரித்துள்ளார். அதாவது அழகு நிபுணரான அவர்  பாழடைந்து கிடைத்த அவரது வீட்டு கிச்சனை மாடிபிகேஷன் செய்ய திட்டமிட்டார். அதன்படி, 7500 நாணயங்களை சேகரித்து அவற்றை கொண்டு கிச்சன் சுவற்றை அழகுபடுத்தினார். அதிலும் வெறும் 9 மணி நேரத்திலேயே அவரது கிச்சனை மாற்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.