12 மாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்த கொடுமை,.100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.? 

12 மாடி குடியிருப்பு சீட்டுக்கட்டு போல சரிந்த கொடுமை,.100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.? 

அமெரிக்காவின் மியாமியில் 12 மாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம், திடீரென இடிந்து, சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

முதல் கட்டமாக 12 வயது சிறுவன் உள்பட 35-க்கும் மேற்பட்டோரை மீட்டனர். இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சம்பவம் நடந்தபோது கட்டிடத்தில் எத்தனை பேர் இருந்தார்கள்? என தெளிவாக தெரியவில்லை என்றும், காணாமல் போனவர்களை தங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.