கார்களில் பணத்தை நிரப்பி ஆப்கான் அதிபர் தப்பியோட்டம்?

தலிபான்களுக்கு பயந்து தப்பியோடிய ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி, ஹெலிகாப்டர் மற்றும் 4 கார்களில் பணம் நிரப்பி சென்றதாக ரஷ்ய தூதரகம்  தகவல் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படை விலகியதை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த தலிபான்கள் கடந்த ஞாயிற்று கிழமை காபூலை கைப்பற்றினர். இதையடுத்து, மக்களின் ரத்தம் சிந்தப்படுவதை தான் விரும்பவில்லை என கூறி அஷ்ரப் கனி அங்கிருந்து தஜிகிஸ்தான் தப்பியோடினார். அவர் தற்போது ஓமனில் தஞ்சமடைந்துள்ள நிலையில், மக்களை தத்தளிக்க விட்டுவிட்டு கோழைத்தனமாக அவர் சென்றுவிட்டதாக அந்நாட்டு மக்கள் மட்டுமல்லாது உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஓமனில் தஞ்சமடைந்துள்ள அவர்,  4 கார்களில் பணம் நிரப்பி சென்றதாக காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது ஹெலிகாப்டரிலும் பணம் நிரப்ப முயன்றதாகவும், ஆனால் பாதியே நிரப்ப முடிந்ததால், குறிப்பிட்ட தொகையை விமான ஓடுதளத்தில் விட்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.