இந்திய மக்களுக்கு என்ன சொல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மூத்த எம்.பிக்கள், இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்திய மக்களுக்கு என்ன சொல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மூத்த எம்.பிக்கள், இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

1947ம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற இந்தியா இன்று தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இதையொட்டி அமெரிக்க செனட் சபை எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனநாயக கட்சியை சேர்ந்தவரான மார்க் வார்னர் தெரிவித்த வாழ்த்து செய்தியில், 75வது ஆண்டு சுதந்திர தினத்தில் இந்திய மக்களை வாழ்த்த விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

உலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான உறவின் வலிமை முன்னெப்போதும் இல்லாததை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது என குறிப்பிட்ட அவர், 75 ஆண்டுகளாக இந்தியா ஒரு வலுவான ஜனநாயக எதிர்காலத்தை நோக்கி நகர்ந்துள்ளது என கூறியுள்ளார்.  ஜான் கார்ரின் என்ற மூத்த எம்.பியும் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

இதேபோல் சுனிதா வில்லியம்ஸும் சுதந்திர தின வாழ்த்துக்களை கூறியதோடு, புவி மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் நாசா மற்றும் ஐஎஸ்ஆர்ஓ ஒன்றிணைந்து செயல்பட்டு வருவது  மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும்அவர் கூறியுள்ளார்.