100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வறட்சியை சந்திக்கும் பிரேசில்.!!!

100 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வறட்சியை சந்திக்கும் பிரேசில்.!!!

வேளாண் பொருட்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான பிரேசிலில், கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவியுள்ளது.

அமேசான் காடு உள்ளிட்ட இயற்கை வளங்கள் நிறைந்த பிரேசில் அண்மைக்காலமாக வறட்சியை சந்திக்கிறது. மழைப்பெய்யாததால், விவசாயமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சாவ் பாவுலோ பகுதியில் உள்ள நீர் தேக்கங்கள் வறண்டு, பாளம் பாளமாக வெடித்துள்ளன. நீர் பாசனத்திற்காக, விவசாயிகள் அனல்மின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இதனால் மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த வறண்ட சூழலுக்கு, பருவ நிலை மாற்றம் தான் காரணம் என கூறப்படுகிறது.