இந்திய எல்லைக்கு அருகில் புல்லட் இரயில்,..அறிமுகப்படுத்திய சீனா,. இந்தியாவுக்கு ஆபத்தா.?

இந்திய எல்லைக்கு அருகில் புல்லட் இரயில்,..அறிமுகப்படுத்திய சீனா,. இந்தியாவுக்கு ஆபத்தா.?

திபெத்தில் சீனாவால் கட்டமைக்கப்பட்டு வந்த முழு மின்மயமாக்கப்பட்ட புல்லட் இரயில் சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

சீனா தனது 5 ஆண்டுத் திட்டத்தில் திபெத்தில் மிகப்பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்து பல்வேறு கட்டுமானங்களையும், உள்கட்டமைப்பையும் மேம்படுத்த திட்டமிட்டது. அதன்படி 30 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்து இமயமலை பகுதியில் உள்கட்டமைப்பையும், புதிய எக்ஸ்பிரஸ் வழித்தடத்தைக் கட்டவும், இந்திய எல்லைப் பகுதியில் தற்போது இருக்கும் வழித்தடத்தை மேம்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில், திபெத் தலைநகரான லாசா மற்றும் நைச்சி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 435 கிலோ மீட்டர் தொலைவிலான புதிய இரயில் பாதையை தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இது இந்திய எல்லையான அருணாச்சல பிரதேசத்திற்கு மிக அருகில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் படைகள் மற்றும் தடவாளங்களை மிக விரைவாக இந்திய பகுதிகளுக்கு சீனாவால் கொண்டுவர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.