பாதுகாப்புத்துறை அமைச்சர் வீடருகே கார் குண்டுவெடிப்பு... இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் வேண்டுகோள்...

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் வீடருகே சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்ததில் பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் வீடருகே கார் குண்டுவெடிப்பு... இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் வேண்டுகோள்...

ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தாலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அந்நாட்டில் அரசுப்படைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையே கடும்மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பிஸ்மில்லா கான் முகமதி வீடருகே தாலிபான்கள் அடுத்தடுத்து கார் வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தினர். துப்பாக்கி ஏந்திய சில பயங்கரவாதிகள் பாதுகாப்புத்துறை அமைச்சரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் பாதுகாப்புடன் உள்ளதாக பிஸ்மில்ல கான் முகமதி டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் சிலகர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நிலவரம் தொடர்பாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது ஹனிப் அத்மர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தாலிபான்கள் வன்முறையை தடுக்க சர்வதேச சமூகம் உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.