பூமிக்கு ஆபத்தா....நாசா அதிர்ச்சி செய்தி...!!!!

பூமிக்கு ஆபத்தா....நாசா அதிர்ச்சி செய்தி...!!!!

பூமியைச் சுற்றியுள்ள சிறுகோள் செயல்பாடு சமீபத்தில் அதிகரித்துள்ளது. ஏறக்குறைய ஒரு விமானத்தின் அளவிலான சிறுகோள் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது.  இன்று  பூமியை அதிக அளவில் நெருங்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பூமியை தாக்கும் சிறுகோள்:

NEO 2022 QP3 என அழைக்கப்படும் சிறுகோள் இன்று இரவு அல்லது அதிகாலை பூமியை கடந்து செல்லும் என்று நாசாவின் CNEOS தெரிவித்துள்ளது. இது 100 அடி அகலம் கொண்ட சிறுகோள் ஆகும், இது பூமிக்கு 5.51 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அபாயகரமான பொருள்:

நாசாவின் பாதுகாப்பு அலுவலகம் சிறுகோளின் அருகாமை குறித்து "அபாயகரமான பொருளாக" அறிவித்துள்ளது.  இது சந்திரனை விட 19. 5 மடங்கு அதிகம் எனவும் இந்த சிறுகோள் வினாடிக்கு 7.93 கிமீ வேகம் கொண்டதாகவும் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிறுகோள்கள் சூரியனைச் சுற்றி வரும் மிகப்பெரிய விண்வெளிப் பாறைகள் எனவும் சில சமயங்களில் கோள்களின் ஈர்ப்பு விசையின் காரணமாக, அவை  அவற்றின் போக்கை மாற்றி, கோள்களுடன் மோதும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. 

டார்ட் விண்கலம்:

அபாயகரமான சிறுகோள்களின் இந்த ஆபத்து, எண்ணற்ற அளவில் சிறியதாக இருந்தாலும், நாசாவை அதன் இரட்டை சிறுகோள் திருப்பிவிடுதல் சோதனை விண்கலத்தை பயன்படுத்த எண்ணியுள்ளது.  இதன் பணி என்பது கிரக பாதுகாப்புக்கான ஒரு முன்முயற்சியாகும்.  ஒரு விண்கலத்தை சிறுகோள் மையத்தில் செலுத்தி அதன் அசல் பாதையில் இருந்து திசைதிருப்பும்.

இதையும் படிக்க: அனைத்து உடைமைகளையும் விற்று கேரேஜில் தூங்கும் எலோன் மஸ்க்!!!!!