இஸ்ரேல் பிரதமரின் பேச்சை கேட்காமல் ஜோபைடன் தூங்கிவிட்டாரா? - வைரலாகி வரும் வீடியோ காட்சி  

இஸ்ரேல் பிரதமர் நாப்தலி பென்னட் உடனான சந்திப்பின் போது அமெரிக்கா அதிபர் ஜோபைடன் தூங்கிவிட்டதாக முன்னாள் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு பகிர்ந்துக் கொண்ட வீடியோ பதிவில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில்  பிரதமராக பதவியேற்ற பிறகு நாப்தலி பென்னட் அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பில் நாப்தலி-யின் பேச்சை கேட்காமல் ஜோபைடன் தூங்கிவிட்டதாக முன்னாள் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு ஒரு வீடியோ பதிவு ஒன்றை தனது இணைய பக்கத்தில் பகிந்திருந்தார். இது வைரலாக பரவ வீடியோவின் உண்மை தன்மையை ஆராய்ந்த ராய்ட்டர்ஸ்  பகிரப்பட்ட  வீடியோ கிளிப் தவறாக வெட்டப்பட்டது என தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.