டொனால்ட் டிரம்பின் தேர்தல் மோசடி குறித்த ஆவணப்படம் - ஆர்வமுடன் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் மக்கள்...!

டொனால்ட் டிரம்பின் தேர்தல் மோசடி குறித்த ஆவணப்படம் - ஆர்வமுடன் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் மக்கள்...!

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தேர்தல் மோசடி குறித்த ஆவணப்படம் வெளியாகி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தினேஷ் டி'சோசா இயக்கத்தில் மே மாத இறுதியில் வெளியான 2 ஆயிரம் மியுல்ஸ் என்ற படம் பாக்ஸ் ஆபிஸில் 1 புள்ளி 2 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் ஓடிகொண்டு இருந்தாலும், மூத்த குடிமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் இப்படத்தை கண்டு ரசித்து வருகின்றனர். 2020ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் நடைபெற்ற மோசடிகளை வெளியே கொண்டு வரும் வகையில் இப்படத்தின் கதை அமைந்துள்ளது.