பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் பரவி வரும் காட்டு தீ.. ஆயிரக்கணக்கான ஏக்கர் வனவளம் அழிந்து வரும் அவலம்!!

ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் கடந்த சில நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாததால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வனவளம் அழிந்து வருகிறது.

பல்வேறு நாடுகளில் ஒரே நேரத்தில் பரவி வரும் காட்டு தீ.. ஆயிரக்கணக்கான ஏக்கர் வனவளம் அழிந்து வரும் அவலம்!!

பற்றி எரிந்து வரும் காட்டுத் தீ:

ஸ்பெயின், பிரான்ஸ், துருக்கி, கிரீஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், மொராக்கோ என பல்வேறு நாடுகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. ஸ்பெயினில் ஏழாயிரம் ஹெக்டேரும் பிரான்சில் 11 ஆயிரம் ஹெக்டேர் வனப்பகுதி முழுமையாக எரிந்துள்ளது.

பற்றி எரியும் ஸ்பெயின்:

ஸ்பெயினில் வேகமாகப் பரவி வரும் தீயானது தற்போது கேட்டலோனிய நகர குடியிருப்புப் பகுதிகளை நெருங்கி விட்டது. இதனால் அதிக அளவிலான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காட்டுத் தீயால் எழுந்த வெப்பக் காற்றால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஹெலிகாப்டர்களும் விமானங்களும் தீயணைக்கும் பணியில் இடைவிடாமல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கவலை தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள்:

காலநிலை மாற்றத்தின் விளைவை ஒவ்வொரு நாடும் எதிர்கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.