ஜெர்மனி கடற்படை அதிகாரிக்கு நடுக்கடலில் உடல்நலம் பாதிப்பு: ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

ஜெர்மனி நாட்டின் பாயர்ன் கடற்படை கப்பலில் பயணித்த அதிகாரிக்கு நடுக்கடலில் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.

ஜெர்மனி கடற்படை அதிகாரிக்கு நடுக்கடலில் உடல்நலம் பாதிப்பு: ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

ஜெர்மனி நாட்டின் பாயர்ன் கடற்படை கப்பலில் பயணித்த அதிகாரிக்கு நடுக்கடலில் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது.

மும்பையில் இருந்து 275 கி.மீ. தொலைவில் அரபி கடலில்  பாயர்ன் கடற்படை கப்பல் சென்று கொண்டு இருந்தது. அப்போது கப்பலில் இருந்த அந்த நாட்டு கடற்படை அதிகாரி ஒருவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு உதவி செய்யும்படி ஜெர்மன் தூதரகம் இந்திய கடற்படையிடம் கேட்டு கொண்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விரைந்து சென்று ஜெர்மனி போர்க்கப்பலில் இருந்த அதிகாரியை மீட்டனர்.

மேலும் கொலபாவில் உள்ள கடற்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.