"சர்வதேச பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" ரஷ்ய அதிபா் புதின்!!

"சர்வதேச பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" ரஷ்ய அதிபா் புதின்!!

சட்டவிரோத தடைகளால் சர்வதேச பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபா் விளாடிமிா் புதின் தொிவித்துள்ளாா். 

இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-வது மாநாடு வரும் 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், ஒத்துழைப்பு உள்ளிட்டவை தொடர்பாக இம்மாநாட்டில் விவாதிப்பதாக கூறப்பட்டது.

தென்னாப்பிாிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் இந்த பிரிக்ஸ் வர்த்தக மாநாட்டில் ரஷ்ய அதிபா் விளாடிமிா் புதின் பங்கேற்று பேசியுள்ளார். அப்பொழுது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் சட்டவிரோத தடைகளால் சர்வதேச பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டவிரோதமான அனுமதி நடைமுறை மற்றும் இறையாண்மை கொண்ட நாடுகளின் சொத்துக்களை சட்டவிரோதமாக முடக்குதல் ஆகியவற்றால் சர்வதேச பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தொிவித்துள்ளார்.  

மேலும் உணவு, அடிப்படை விவசாயப் பொருட்கள் மற்றும் பயிர்களுக்கான விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இதன்காரணமாக ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கப்படைந்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க || "எனக்கே நீங்கள் தான் ஆறுதல் சொல்ல வேண்டும்" அமைச்சர் துரைமுருகன் பேச்சு!!